ரேசன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை-அறிவிப்பு

 தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.


உணவு மற்றூம் நுகர்ர்வோர் வழங்கள் துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கொரோனா காரணமாக ரேசன் கடை ஊழியர்கள் தங்களின் விடுமுறை நாட்களான கடந்த ஜூலை10,அகஸ்ட்7 மற்றும் செப்.,4 ஆகிய தேதிகளில்  பணிகளை மேற்கொண்டனர்.இம்மூன்று நாட்கள் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த 3 நாட்களுக்கு இணையாக செப்.,19,அக்.,17 மற்றும் நவ.,21 ஆகிய நாட்கள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.