ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது - சீமான்

 


ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது, வந்தாலும் மாற்றம் ஏற்படாது.


கடந்த சில தினங்களாக, ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் நிலைப்பாடு குறித்து, முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து, நேற்று ரஜினிகாந்த் பெயரில், போலியான அறிக்கை ஒன்று இணையத்தில் வெளியாகி, வைரலாகி வந்தது.


இந்நிலையில், ரஜினிகாந்த் இந்த அறிக்கை குறித்த விளக்கத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இதனையடுத்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், இதுகுறித்து கூறுகையில், "ஓய்வு தேவை என்பதால், ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது. அப்படி வந்தாலும் எந்த மாற்றமும் ஏற்படாது.


அரசியலில் கமலஹாசன், ரஜினிகாந்தை விட  மூத்தவன் என்றும், அவரை அரசியலில் இறக்கி விடுவார்கள். ஆனால், அவரை  இழிவாக பேசுவார்கள் என தெரிவித்துள்ளார்.