செய்திகள்

 மாமல்லபுரம் இசிஆர் சாலையில் பொதுமக்களுக்கு போக்குவரத்து போலீசார் சார்பில், இலவசமாக முககவசம் வழங்கி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாமல்லபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாமல்லபுரத்துக்கு ஏராளமான பொதுமக்கள் நேற்று சென்றனர்.


இதில், பலர் கொரோனா பற்றிய விழிப்புணர்வு இல்லாமல், முககவசம் அணியாமல் வந்தனர்.அவர்களை, மாமல்லபுரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செல்வமூர்த்தி தலைமையில், எஸ்ஐ கார்த்திகேயன் மற்றும் போலீசார் கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் நுழைவாயிலில் தடுத்து நிறுத்தினர்.


பின்னர், அவர்களுக்கு கொரோனா பற்றிய முழு விழிப்புணர்வு ஏற்படுத்தி, இலவசமாக முககவசம் வழங்கி, மாமல்லபுரம் நகருக்குள் செல்ல அனுமதித்தனர்.


-------------------------------------


 


வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து செங்கல்பட்டு மாவட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் பணீந்திர ரெட்டி நேற்று தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.


பின்னர், செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் மற்றும் அதிகாரிகளுடன் வெள்ள தடுப்புப் பணிகளை பார்வையிட்டார். இதில், தாம்பரம்-முடிச்சூர் சாலை, பாப்பன் கால்வாய் பகுதியில் நடைபெற்ற பணிகளை பார்வையிட்ட பணீந்திர ரெட்டி பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.