உரையாற்றும் போது அடிக்கடி இருமிய சீன அதிபர்


சீன அதிபர் ஜி ஜின்பிங் கம்யூனிஸ்ட் கட்சி சார்பான ஒரு நிகழ்வில் உரையாற்றும் போது, அவருக்கு அடிக்கடி மிக தீவிரமான இருமல் ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரையும் இந்த வைரஸ் தாங்கி வருகிறது. இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் கம்யூனிஸ்ட் கட்சி சார்பான ஒரு நிகழ்வில் உரையாற்றும் போது, அவருக்கு அடிக்கடி மிக தீவிரமான இருமல் ஏற்பட்டுள்ளது.


இதனால், இருமல் ஏற்படும் ஒவ்வொரு முறையும் அவர் பேச்சை நிறுத்த வேண்டிய சூழல் உருவானதால், ஊடகங்கள் துண்டிக்கப்பட்டன. இவரது இந்த செயலால் அவருக்கு கொரோனா உள்ளதா? என்ற அச்சம் உருவாகியுள்ளது.


ஏற்கனவே அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரேசில் நாட்டு அதிபர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில், சீன அதிபர் இருமுறை பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தொடர்பின்றி இருந்த நிலையில், தற்போது சீனாவில் கொரோனா இல்லை என்பதை நிரூபிக்க முகக்கவசம் அணியாமல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.