ஹத்ராஸ் சம்பவம்

 



உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரைச் சேர்ந்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கடந்த மாதம் 14-ம் தேதி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்தப் பெண் சிகிச்சைக்காக டெல்லி சப்தார் ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.


இதையடுத்து, அந்தப் பெண்ணின் உடலை வலுக்கட்டாயமாக ஹத்ராஸுக்கு இரவோடு இரவாகக் கொண்டு வந்த போலீஸார், நேற்று அதிகாலை தகனம் செய்தனர்.


உத்தரப்பிரதேசம் ஹத்ராஸுக்கு செல்ல முயன்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை உ.பி. போலீஸார் கைது செய்தனர். அப்போது ராகுல் காந்தியை முரட்டுத்தனமாக பிடித்து போலீஸார் தள்ளியதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.


சாமானிய மனிதர் நடக்கக் கூடாதா. எங்கள் வாகனத்தை மறித்தீர்கள், அதனால் நடக்கிறோம்” எனத் தெரிவித்தார்.


ஆனால், 144 தடை உத்தரவு தடையை மீறி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியும் நடக்கத் தொடங்கியதால் அவர்கள் இருவரையும் போலீஸார் ஐபிசி பிரிவு 188ன் கீழ் கைது செய்து அழைத்துச் சென்றனர்.


நான் உலகில் யாருக்கும் அஞ்சமாட்டேன்... யாருடைய அநீதிக்கும் நான் தலைவணங்கமாட்டேன் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.


பொய்யை எதிர்க்கும் போது எல்லா துன்பங்களையும் என்னால் தாங்க முடியும் என்று ராகுல் காந்தி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். பொய்யை உண்மையுடன் வெல்வேன்; காந்தி ஜெயந்தியையொட்டி ராகுல்காந்தி டிவிட்டரில் தகவல் அளித்துள்ளார்.