கொரோனா தொற்று செய்திகள்

 தமிழகத்தில் மேலும் 2,608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,22,011-ஆக அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 38 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,091-ஆக அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 6,87,388- பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 23,532- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11.93 லட்சத்தை தாண்டியது.


பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,193,214  பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.


உலகம் முழுவதும் கொரோனாவால் 45,892,167 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 33,242,456 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 83,309 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.