உலக மனநல நாள் (World Mental Health Day) 10-10-2020

  


உலக மனநல நாள் (World Mental Health Day) ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று உலகளாவிய மனநலக் கல்வி,  விழிப்புணர்வு மற்றும் சமூக மனப்பான்மைக்கு எதிராக வாதிடும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது.[இந்நாள் முதன் முதலாக 1992 ஆம் ஆண்டில் உலக மனநல மையத்தின் முன்னெடுப்பில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் 150 இற்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன. ஆத்திரேலியா போன்ற சில நாடுகளில் இந்நாள் மனநல வாரமாக ஒரு கிழமைக்கு கொண்டாடப்படுகிறது


மனநலப் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அக்.10-ம் தேதி உலக மனநல தினமாக அனுசரிக்கப்படுகிறது.


உலக சுகாதார அமைப்பு, உலக நல மருத்துவ அமைப்பு, இந்திய மனநல மருத்துவ சங்கம் போன்றவற்றின் அறிவுறுத்தலின் பேரில் இந்தியாவில் அக்டோபர் 4 முதல் 10-ம் தேதி வரை உலக மனநல பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.


உடலில் எவ்வித நோயும் இல்லாமல் இருப்பது மட்டும் ஆரோக்கியமாகி விடாது. ஒருவர் மனநலம், உடல் நலம் மற்றும் சமூக நலம் ஆகியவற்றை ஒரு சேரப் பெற்றிருந்தால் மட்டுமே, அவரை ஆரோக்கியமானவராக கருதலாம் என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது.


1994 -ல் இருந்து ஆண்டு தோறும் குறிப்பிட்ட கருப்பொருளில் இந்நாள் கடைபிடிக்கபடுகிறது.  1. நலவாழ்வுக் கேடுகள் எல்லை கடந்தவை.

  2. வளமான எதிர்காலத்திற்காக நலவாழ்வில் அக்கறை செலுத்துங்கள்.

  3. நலவாழ்வே பாதுகாப்பை உறுதிப்படுத்தும். பாதுகாப்பின்மை உடல்நலக்கேட்டை உண்டுபண்ணும்.

  4. பன்னாட்டளவிலான நலவாழ்வு அச்சுறுத்தல்களுக்கு விரைந்து முகம் கொடுக்க வேண்டும்.

  5. உலக நலவாழ்வு நிறுவனம் உலகின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றது.


நலம் என்பது என்ன? இன்றைய காலகட்டத்தின் மிக அவசியமான கேள்வி. பெரும்பாலான நேரங்களில் நோய்கள் எதுவும் இல்லாதிருக்கும் நிலையையே நலம் என்று நாம் கருதிக்கொள்கிறோம்.


ஆனால், உலக சுகாதார நிறுவனத்தின் வரையறையின் படி ‘முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த உடல், உள்ளம், சமூகத்தின் ஆரோக்கியமே நலம்’.


அன்றாட வாழ்க்கையில் நாம் நலம் எனக் கவலைப்படுவது எல்லாம் உடல் நலத்தைப் பற்றி மட்டுமே.


உள நலனோ அல்லது சமூக நலனோ நலம் தொடர்பாக நாம் கொண்டிருக்கும் வரையறைக்குள் வருவதில்லை.


முதிர்ச்சியான உள்ளமும், பொறுப்பான சமூகமும் எப்படி தனிப்பட்ட ஒருவரின் உடல் நலனைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றன என்பதைக் கண்கூடாக இந்த கொரோனா காலத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.


அதே வேளையில், உடல் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு உள நலனையும், சமூக நலனையும் நாம் எப்படிப் புறக்கணித்துக்கொண்டிருக்கிறோம் என்பதையும் இந்தக் காலத்தில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.


மன நல பாதிப்புக்கான காரணங்கள்!

‘மனது’ என்பது மூளை சம்பந்தப்பட்டது. மூளையின் செயல்பாடுதான் மனதாக உணரப்படுகிறது. நீண்ட கால சோகம், வேலையின்மை, ஏமாற்றம், ஏக்கம், தொடர் தோல்வி, அதிகமான மதுப் பழக்கம், எதிலும் பிடிப்பு இல்லாமல் இருப்பது ஆகியவை மன அழுத்தம் உருவாவதற்கு காரணங்கள். இதுதவிர 200-க்கும் மேற்பட்ட மனநோய்கள் உள்ளன. இவையெல்லாம் நம் மனதை தினம்தினம் பாதித்துக் கொண்டுதான் இருக்கின்றன.


பொதுவாகவே, நாம் மனநலத்தையும் மனநோயையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்திக்கொள்கிறோம். அதன் விளைவாகவே மனநலம் தொடர்பாகப் பேசத் தயங்குகிறோம். நான் மனநலத்துடன் இல்லை அல்லது எனது மனம் ஆரோக்கியமாக இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள மறுப்பதற்குக் காரணம், அது மனநோய் என்று உருவகப்படுத்தப்படுமோ என்ற பயம்தான். அதனால்தான், மனநலம் என்ற வார்த்தையின் மீதே நமக்கு ஒருவித ஒவ்வாமை ஏற்பட்டுவிடுகிறது.


மனநலப் பிரச்சினைகளை நமக்குள்ளே ரகசியமாய் வைத்துக்கொள்கிறோம்; அதற்கான உதவிகள் கேட்பதைக்கூடப் பலவீனமாய் நினைத்துக் கொள்கிறோம். மனநலம் தொடர்பாகத் தனிப்பட்ட முறையில் நாம் கொண்டிருக்கும் இந்தக் கற்பிதங்கள்தான் மனதைப் பற்றி நாம் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருக்கும் நிலைக்குக் காரணம்.


எதிலும் ஆழ்ந்த வாசிப்பு இல்லை, மனிதர்கள் மீதான கரிசனங்களோ அல்லது பெரும் மதிப்பீடுகளோ இல்லை, நீடித்த உறவை அவர்களால் யாருடனும் பேண முடிவதில்லை, மொத்தத்தில் சகிப்புத்தன்மை குறைந்த, உயர்ந்த சிந்தனைகளோ அல்லது லட்சியங்களோ எதுவுமற்ற ஒரு தலைமுறை உருவாகிக்கொண்டிருக்கிறது.


ஆனால், பொதுவில் அப்படி அணுகப்படுவதில்லை என்பதற்கு மாணவர்களின் தற்கொலைகள் ஓர் உதாரணம்.


சமூக, பொருளாதாரப் பின்புலங்கள் அத்தனையும் புறந்தள்ளப்பட்டு ஒரே தேர்வு, ஒரே கல்வி என அவர்களின் அறிவுசார் மதிப்பீடுகள் புதிய வடிவம் பெறுவதன் விளைவாக நிகழும் மாணவர்களின் தற்கொலைகளைக்கூட அந்தந்தத் தனிப்பட்ட மாணவர்களின் மனநிலையோடு தொடர்புபடுத்தி முடிப்பதுதானே இங்கு நடக்கிறது?


தனிப்பட்ட ஒருவரின் மனநலம் என்பது அந்தத் தனிப்பட்ட நபர்தான் பொறுப்பு என்பதும்கூட தவறான வாதம். ஒரு சமூகத்தின் மானுடம் பற்றிய மதிப்பீடுகள், அறங்கள், விழுமியங்கள் ஆகியவைதான் தனிப்பட்ட ஒருவரின் மனநிலையை வளர்த்தெடுக்கின்றன. குற்றங்களும் தற்கொலைகளும் பட்டினிச் சாவுகளும் அதிகளவில் நடக்கும் சமூகம் தன்னளவில் ஆரோக்கியம் குன்றிய ஒன்றாகவே இருக்கிறது.


மன நோயிலிருந்து விடுதலை!

மனநோய் என்பது ஒரு சமூக நோய். குழந்தைகள் முதல் முதியோர் வரை எல்லோரையும் தாக்கும் மனநோயையும், அதன் அறிகுறிகளையும் தெரிந்துகொள்வதே, அதிலிருந்து மீள்வதற்கான முதல் படி. சுருக்கமாகச் சொல்வதென்றால் ஒருவரின் சிந்தனையில், செயல்பாடுகளில், நடத்தை மற்றும் உணர்வுகளில், பிறரை விட வித்தியாசமோ, தீவிரமோ தெரிந்தால், அது மனநலப்பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம்.அப்படி வரும் அறிகுறிகள் ஒருவரிடம் தொடர்ந்து காணப்பட்டால், உடனடியாக, மனநல மருத்துவர் அல்லது மனநல உளவியலாளரிடம் அழைத்துச் செல்ல வேண்டியது மிகவும் அவசியம்.


அறநெறிகளையும் சிந்தனைகளையும் வளர்த்தெடுக்கும் சுமையற்ற கல்வி, பாகுபாடில்லாத பார்வையையும் பாசாங்கற்ற நடத்தையையும் சுய ஒழுக்கத்தையும் பிரதானமாகக் கொண்ட வளர்ப்பு முறை, சமத்துவத்தையும் சுதந்திரப் போக்கையும் சமூக ஒழுங்கையும் எப்போதும் கொண்டிருக்கும் முதிர்ச்சியான சமூகம் என இத்தனையும் சேர்ந்தே ஒருவரின் மனநலத்தைத் தீர்மானிக்கின்றன.


அனைவருக்குமான மனநலம்’ என்ற உலக மனநல அமைப்புகளின் பிரச்சாரம் இவை அத்தனையையும் உள்ளடக்கியதாக இருந்தால் மட்டுமே நாம் முழுமையான நலத்தை நோக்கி நகர முடியும்.


அப்படிப்பட்ட நலத்தின் வழியாகவே நாம் ஆரோக்கியமான எதிர்காலத்தைக் கட்டமைக்க முடியும்.

ஒருவர் சரியான மனநிலையில் இருந்தால் மட்டுமே, அவரால் சரியான ஆரோக்கியமான முடிவுகள் எடுக்க முடியும். தனது வேலையை திறம்படச் செய்யவும் முடியும்.


சமூக விஷயங்களில் பங்கெடுத்து, நல்ல குடிமகனாகத் திகழ முடியும்.


எனவே மனநலத்தை பேணுவோம்..ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம்!!!

 
MOHANASELVARAJ