கொரோனா சிகிச்சை -அமெரிக்கவாழ் இந்திய சிறுமி பரிசு





கொரோனா சிகிச்சை ஆராய்ச்சியில் அமெரிக்காவாழ் இந்திய சிறுமியின் அசத்தல் கண்டுபிடிப்பு.


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


இந்நிலையில், கொரோனாவிற்கு சிகிச்சையளிப்பதற்கான, மருந்து கண்டறியும் ஆராய்ச்சிக்காக, "2020   3எம் இளம்விஞ்ஞானி" போட்டியில், அமெரிக்க வாழ் இந்தியரான அனிகா செப்ரோலு (14) என்ற சிறுமி கலந்து கொண்டுள்ளார்.


இந்த போட்டியில் கலந்து கொண்ட அனிகா, கொரோனா வைரஸிற்கு சிகிச்சை அளிப்பதற்கான அவர் மேற்கொண்ட ஆராய்ச்சியை, அந்த போட்டியில் சமர்ப்பித்துள்ளார். இவரது கண்டுபிடிப்புக்காக 25 ஆயிரம் டாலர் பரிசினையும் வென்றுள்ளார். அவரது ஆராய்ச்சியில், கொரோனா வைரஸில் மேல்பகுதியில், முள் போன்ற அமைப்பு காணப்படுகிறது.


இது புரோடீனால் ஆனது. நாம் சோப்பு போட்டு கை கழுவும் போது. வைரஸின் மேல் பகுதியில் உள்ள அந்த முள் போன்ற அமைப்பு சிதைந்து விடும். இந்த முள் மூலம் தான், வைரஸானது நமது உடலுக்குள் நுழைகிறது. இந்த வைரஸ் உடலுக்குள் சென்ற பின் அது பெருகி, தொற்று நோயாக மாறுகிறது.


இந்நிலையில், புரோடீனுடன் பிணைந்து காணப்படும் இந்த முள் போன்ற மூலக்கூறை தான் இந்த மாணவி கண்டுபிடித்துள்ளார்.


அனிகா இந்த மூலக்கூறை கண்டறிய, பல கணினி நிரல்களை பயன்படுத்தி உள்ளார். மேலும் இதற்கான மருந்துக்கு எந்த மூலக்கூறு சரியாக இருக்கும் என்பதை கண்டறிய, சிலிகா மெதடாலஜி முறையை பயன்படுத்தி உள்ளார்.


இதுகுறித்து அனிகா கூறுகையில், "போட்டியில் வென்றது எனக்கு உற்சாகமாக இருக்கிறது. இந்த ஆராய்ச்சியை நான் தொடர்ந்து செய்ய விரும்புகிறேன்." என்று தெரிவித்துள்ளார். அனிகாவிற்கு மருத்துவராகவும், மருத்துவ ஆராய்ச்சியாளராகவும் வரவேண்டும் என்பது தான் அவரது லட்சியம் ஆகும்.