பாபா அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம்


மைசூருவில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி மாயமானதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து கூறப்படுவதாவது: ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அபிஷேக்ரெட்டி குல்லா இவர் கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள பாபா அணு ஆராய்ச்சிமையத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வந்துள்ளார்.


கடந்த 6-ம் தேதி இரு சக்கரவாகனத்தில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதனிடையே பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக அதிகாரியான டிகே போஸ், அறிவியல் அதிகாரியான அபிஷேக்ரெட்டி குல்லா கடந்த செப்., மாதம் 17-ம் தேதி முதல் பணிக்கு வரவில்லை என்றும் கடந்த 5ம் தேதி அவரை மொபைலில் தொடர்பு கொண்ட போது 6 ம் தேதி பணியில் சேருவதாக கூறியதாக யெல்வால் போலீசில் புகார் அளித்துள்ளார்.


இந்நிலையில் காணாமல் போன விஞ்ஞானியின் நண்பர்கள், அவரை ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்து தேடி கண்டுபிக்கும் முயற்சில் இறங்கி உள்ளனர்.