மின்சார வாகனங்களுக்கு சாலை வரியிலிருந்து விலக்கு - டெல்லி அரசு

  


மின்சார வாகனங்களுக்கு சாலை வரி விலக்கு அளிப்பதாக போக்குவரத்து துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


டெல்லியின் மின்சார வாகனக் கொள்கையின் படி , பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு சாலை வரி விலக்கு அளிப்பதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு அறிவித்துள்ளது.


டெல்லி அரசாங்கத்தின், மின்சார வாகனக் கொள்கையின் கீழ் பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்கள் மீதான சாலை வரி முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படுவதாக டெல்லி போக்குவரத்துத் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


மேலும், பதிவு கட்டணம் மீதான விலக்கு குறித்து பொதுமக்களிடமிருந்து ஆலோசனைகள் கேட்டறிந்து அடுத்த மூன்று நாட்களில் கட்டணத்தை தள்ளுபடி செய்வதற்கான உத்தரவுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.