லஞ்சம்- சுற்றுச்சூழல் பொறியாளரிடம் இருந்து கணக்கில் வராதரொக்கம் பறிமுதல்

 வேலூரில் லஞ்சம் வாங்கிய மாசுக்கட்டுப்பாடு வாரிய இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.33.73 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.


விருதம்பட்டில் உள்ள சுற்றுச்சூழல் பொறியாளர் பன்னீர்செல்வத்தின் அலுவலகத்திலிருந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.


இதுதொடர்பாக இன்று வழக்குப்பதிவு செய்த விஜிலென்ஸ் போலீசார், சுற்றுச்சூழல் பொறியாளர் பன்னீர்செல்வத்திடம் கைப்பற்றப்பட்ட ₹33.73 லட்சத்தை கோர்ட்டில் ஒப்படைத்தனர். மேலும் இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.