வரத்து குறைவால் உயரும் விலை: வெங்காயம்


 


பெரிய   வெங்காயம் வரத்து குறைந்துவிட்டதால் அதன் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இன்னும் 10 நாட்களில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.120-ஐ தொடும் என்கின்றனர் மொத்த விற்பனையாளர்கள்.




இந்தியாவில், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில்தான் அதிக அளவில் பெரிய   வெங்காயம்சாகுபடி செய்யப்படுகிறது. இதில் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் வெங்காயப் பயிர்கள் 75% அளவுக்கு அழிந்துவிட்டன.


இதனால், அக்டோபர் மாதத் தொடக்கத்தில் மொத்த விலையில் பெரிய    வெங்காயம் கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது கிலோ ரூ.80 வரை விற்பனையாகிறது. அதேநேரம், சின்ன   வெங்காயம் கிலோ ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.




டிசம்பர் வரை விலை உயர்வு


தற்போது ஏற்றுமதிக்கு தடை உள்ளதால் இதுவரை பெரிய அளவில் விலை ஏறவில்லை. இருப்பினும் இன்னும் 10 நாட்களில் சில்லறை விலையில் பெரிய   வெங்காயம் கிலோ ரூ.120-ஐஎட்டும். இந்த விலை உயர்வு டிசம்பர் மாதம் வரை இருக்கும். அடுத்த ஆண்டு ஜனவரியில் தான் விலை குறைய வாய்ப்புள்ளது.


அரசு இப்போதே திட்டமிட்டு, வெங்காயத்தை கடந்த ஆண்டைப்போல இறக்குமதி செய்தால் விலை உயர்வை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.


சின்ன வெங்காயத்தைப் பொறுத்தவரை தற்போது முதல் தரம் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்தாலும், 25 நாட்களில் இதன் விலை 50 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது என்றார்.