சென்னையில் முட்டை விற்பனை


கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் அதற்கு உதாரணமாக 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து மிகவும் அதிகளவில் சீப்பாக குப்பைகளிலும் கொட்டப்பட்டது.


இதற்கு பின் வேகமாக முட்டை விலை உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை முட்டையின் விலை வரலாறு காணாத வகையில் 5.25 காசுகளாக உயர்ந்துள்ளது.


தமிழகத்தில் முட்டையின் தேவை அதிகரிப்பதால் காரணமாகவும் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உற்பத்தி குறைந்து தேவை அதிகரித்துள்ளதால் விலை தொடர்ந்து அதிகரிக்கப்படும் என்று கோழிப்பண்ணையாளர்கள் கூறுகிறார்கள்.


மேலும் முட்டை விலை 5.25 காசு முதல் 5.50 காசுகள் வரை விற்கப்படுவதால் சென்னை மாவட்டத்தில் ஒரு முட்டையின் விலை 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது