காற்று மாசு ஏற்படுத்தினால் - அபராதம் - சிறை


டெல்லியில் காற்று மாசு ஏற்படுத்தினால் ரூ.1 கோடி அபராதம்.


டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிற நிலையில், இதனை தடுக்க டெல்லி அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. அந்த சட்டத்தின்படி, காற்று மாசு ஏற்படுத்தினால், ரூ.1 கோடி அபராதமும், 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.


மேலும், டெல்லியில் காற்று மாசை தடுக்க வாரியம் அமைக்கவும் அவசர சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ள நிலையில், காற்று மாசை தடுக்க அமைக்கப்படவுள்ள வாரியத்தில், அரசு துறை அதிகாரிகள், மற்றும் மாநில பிரதிநிதிகள் உறுப்பினராக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.