வியாபாரிகளுக்கு உதவும் ஸ்வநிதி திட்டம்

 


3 லட்சம் சாலையோர வியாபரிகளுக்கு கடன் உதவி வழங்கும் திட்டத்தை இன்று காணொலி வாயிலாக பிரதமர் தொடங்கி வைக்கிறார்.


கொரோனாத்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு உதவும் ஸ்வநிதி திட்டத்தை கடந்த ஜூன்1 ந்தேதி மத்திய அரசால் தொடங்கப்பட்டது.


இதன்படி தெருதெருக்களில் வர்த்தகத்தில் ஈடுபடும் சிறு வியாபாரிகளுக்கான பிரதமரின் கடனுதவி திட்டத்தின் கீழ் 3லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.


இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்து வியாபரிகளோடு பிரதமர் கலந்துரையாடுகிறார்.


இன்று தொடங்கி வைக்கும் இத்திட்டத்தின் படி வியாபாரிகளுக்கு அதிகபட்சம் 10ஆயிரம் வரையில் கடனுதவி வழப்படுவதாகவும் இத்திட்டம் 50லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு பலனளிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


கடனை சரியான நேரத்தில் செலுத்தும் வியாபரிகளுக்கு 7% வருடாந்திர வட்டி மானியமும் வழப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


5000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்த திட்டத்தில் பயன்பெற மொபைல் செயலி மற்றும் இணைய தளம் மூலமும் விண்ணபிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.