பார்ப்பதற்கு எளிமையாகவும், உண்ணுவதற்கு சுவையாகவும் இருக்கக்கூடிய செவ்வாழைப்பழத்தில் எக்கச்சக்கமான மருத்துவ குணங்களும் நன்மைகளும் உள்ளது.
இதில் உள்ள உயிர்சத்துக்கள் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து என பல்வகை தன்மைகளும் நாம் உயிர் வாழ்வதற்கு தேவையான அத்தியாவசியமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அவைகளைப் பற்றி இன்று பார்க்கலாம் வாருங்கள்.
செவ்வாழையின் மருத்துவ குணங்கள்
செவ்வாழைப் பழத்தில் பீட்டா கரோட்டின்கள் அதிகம் உள்ளதால் கண் நோய்களை குணமாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
இதில் உயர்தர பொட்டாசியம் உள்ளதால் சிறுநீரக கற்களை குணப்படுத்துகிறது. இந்த பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது, ஆண்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் காணப்படுகிறது.
மேலும் 50 சதவீத நார்ச்சத்து கொண்ட இந்த பழம் பல் வலி, பல்லசைவு போன்ற பல வியாதிகளை நீக்குவதுடன், 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது பல் தொடர்புடைய நோய்கள் அனைத்தும் குணமாகும் கூடிய வாய்ப்புகளை உருவாக்குகிறது.
செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. மேலும் இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.
வணக்கம் அன்புடன் மோகனா செல்வராஜ்