மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்எல்ஏ காலமானார்


 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கோவை சிங்காநல்லூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான கே.சி.கருணாகரன் (74) காலமானார். கட்சியின் கோவை மாநகர செயலாளராகவும், 23 ஆண்டுகள் மாநிலக் குழுஉறுப்பினராகவும், 1997-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை மாவட்ட செயலாளராகவும் இருந்தார்.


2001 முதல் 2006-ம் ஆண்டுவரை சிங்காநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக பணியாற்றினார். இடதுசாரி கட்சிகளின் அகில இந்திய தலைவர்களான சுர்ஜித், ஏ.பி.பரதன் போன்ற தலைவர்களை வரவழைத்து பேரணி, பொதுக்கூட்டங்களை நடத்தியுள்ளார்.


கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த கே.சி.கருணாகரன், உப்பிலிபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் 09.10.2020 இரவு காலமானார்.