பிளாஸ்டிக் ஸ்டராவுக்கு தடை


உலக நாடுகள் முழுவதும் பல இடங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தில் ஸ்டராக்கள், பானம் கலக்கும் குச்சிகள் மற்றும் பட்ஸ் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது.


அங்கு ஏப்ரல் மாதம் முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில்,  அக்டோபர்  முதல் தடை அமலுக்கு வரவுள்ளது.


ஒருமுறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் பிலாஸ்டிக் பொருட்களுக்கான தடையில் இந்த முயற்சி முக்கியமானதாக கருதப்படுகிறது.


இதுகுறித்து சுற்றுசூழல் செயலர் ஜார்ஜ் எஸ்டைஸ் அவர்கள் கூறுகையில், இங்கிலாந்தில் ஸ்ட்ராக்கள் போன்றவற்றிற்கான தடையின் மூலம் பிளாஸ்டிக் மாசுக்களுக்கு எதிரான எங்களுடைய போரில், அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளோம். இந்த சர்வதேச முயற்சியில் நாங்கள் முன்னோடியாக உள்ளோம்." என தெரிவித்துள்ளார்.