காணொலி விவாதத்தில் பங்கேற்க மாட்டேன்! - அதிபர் ட்ரம்ப்

 தேர்தலுக்காக காணொலி மூலம் நடைபெறும் விவாதத்தில் கலந்து கொள்ள போவதில்லை.


அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான விவாதம் வரும் 15-ம் தேதி விவாதம் நடைபெறவுள்ளது. அதிபர் ட்ரம்ப் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து, காணொலி மூலமாக விவாதம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே, ட்ரம்ப் நேரடி விவாதத்த்தில் கலந்துகொண்டார்.


இந்த விவாதத்திற்கு பின், அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,  ஒருசில நாட்களுக்கு  முன்பு தான் வீடு  திரும்பியுள்ளனர்.


இந்நிலையில், தேர்தலுக்காக காணொலி மூலம் நடைபெறும் விவாதத்தில் கலந்து கொள்ள போவதில்லை என தெரிவித்துள்ளார்.


மேலும், ஜோ பைடனின் பாதுகாப்புக்காக தான், காணொலி மூலம் விவாதம் நடைபெறுவதாக ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.