நாளை நமதே மறைந்த முன்னாள் முதலமைச்சர் நினைவிடத்தில் மரியாதை


2021-ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அவர்களை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.


இதனையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பூங்கொத்து வழங்கியுள்ளார். இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நினைவிடம் நாளை நமதே என்ற வாசகங்கள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள நிலையில், ஈபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வந்தனர்.


அதிமுக தலைமையகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தார். கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது,  முதல்வர் வேட்பாளர் மற்றும் கட்சி வழிகாட்டுதல் குழுவில் இடம் பெற்றவர்களின் பெயர் அறிவிக்கப்பட்டது.


11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் இடம் பெற்றவர்களின் பெயரை முதல்வர் அறிவித்தார். அதில்,  திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் ,சிவி சன்முகம், காமராஜ், ஜேசிடி பிரபாகரன், மனோஜ், பாண்டியன், மோகன், கோபல கிருஷ்ணன்மற்றும் சோழவந்தான் மாணிக்கம் ஆகியோர் இடம்பெற்றனர்.


இந்நிலையில், முதல்வர் அறிவித்த வழிகாட்டுதல் குழுவில் மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பண்ருட்டி ராமச்சந்திரன்,  அன்வர்ராஜா நத்தம் விஸ்வநாதன், முன்னாள் அமைச்சர் செம்மலை, அமைச்சர் செல்லூர் ராஜ், கே.பி அன்பழகன், செங்கோட்டையன் ஆகியோர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.