முருகப்பெருமானை நேரில் தரிசிக்க உதவும் மூல மந்திரம்


உலகின் எட்டுத்திக்கிலும் பரவி இருக்கும் முருகன் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்க உதவும் ஒரு அற்புத மந்திரம் உள்ளது. அது தான் முருகன் மூல மந்திரம். 


இந்த மந்திரத்தை எத்தனை முறை ஜெபிக்கிறோமோ அதற்கேற்ப நமக்கு அறிய பல சக்திகள் கிடைக்கும் என்று கந்த குரு கவசத்தில் கூறப்பட்டுள்ளது.


இந்த உலகில் எவருக்கும் இல்லா இணையற்ற சக்தியை கூட இந்த மந்திரம் மூலம் நம்மால் பெற முடியும் என்பதே உண்மை. முருகன் மூல மந்திரம் அதை எத்தனை முறை ஜபித்தால் எந்த வகையான அருள் நமக்கு கிடைக்கும் என்று பார்ப்போம் வாருங்கள்.


முருகன் மூல மந்திரம் :


ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ ஸ்ரீமத்


சத்குரு சாந்தானந்த சுவாமிகளால் பாடப்பட்ட கந்த குரு கவசத்தில் இந்த மந்திரம் இடம்பெற்றுள்ளது.


ஒரு மனதோடு இந்த மந்திரத்தை ஒரு லட்சம் முறை ஜெபிப்போருக்கு முக்தி என்பது நிச்சயம் அதோடு எம பயம் என்பது அறவே நீங்கும்.


அது மட்டும் அல்லாது முருக பெருமான் ஒளிச்சுடராய் நம் மனதில் நிலைகொள்ள இந்த மந்திரம் உதவுகிறது.


நாம் எண்ணிய அனைத்தும் இந்த மந்திரம் நமக்கு நிறைவேற்றி தரும். இந்த உலகில் இணையற்ற ஒரு சக்தியை பெற இந்த மந்திரத்தை கோடி முறை ஜபிக்க வேண்டும்.


அதோடு சித்தர்களும் ஞானிகளும் கடுந்தவம் இருந்து அறிந்த பல வேத சூட்சும ரகசியங்களை இந்த மந்திரம் ஜெபிப்பதன் மூலம் நாம் எளிதில் அறியலாம்.


அந்த ரகசியங்களை முருகப்பெருமானே நமக்குள் அருள்பெறும் ஜோதியாய் தோன்றி கற்பிப்பார். எத்தனை அறிய மந்திரம் இது.


இது போன்ற இன்னும் எண்ணிலடங்கா பல அறிய பலன்களை இந்த மந்திரம் மூலம் நாம் பெறலாம்.


ஆகையால் இந்த மந்திரத்தை தினம்தோறும் 108 , 1008 , 10008 , 100008 அல்லது அதற்கு மேல் என்று உங்களால் எத்தனை முறை ஜபிக்க முடியுமோ அத்தனை முறை முருகனை நினைத்து ஜபித்து முருகனின் அருள் பெறலாம்.


முருகன் வழிபாட்டிற்குரிய தினங்கள்


தினந்தோறும் முருகப் பெருமானை வழிபடலாம் என்றாலும் அவரின் முழுமையான அருளைப் பெறுவதற்கு வழிபாடு செய்ய மாதத்தில் வருகின்ற செவ்வாய்க்கிழமைகள் மற்றும் மாதந்தோறும் வருகின்ற சஷ்டி தினங்கள் ஆகியவை சிறப்பான தினங்களாக இருக்கின்றன.


ஐப்பசி மாதத்தில் வருகின்ற சஷ்டி திதியில் கந்த சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் சிறப்பான பலன்கள் ஏற்படும். குறிப்பாக குழந்தை பாக்கியம் இல்லாதாவர்களுக்கு குழந்தை பாக்கியம் அருளும் விரதம் சஷ்டி விரதம்.


அதுபோல கார்த்திகை மாதம் முழுவதும் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தர வல்லதாகும்.


முருகன் வழிபாடு பலன்கள்:


முருகப்பெருமானின் முறைப்படி வழிபடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் நீங்கும்.


எதிரிகள் தொல்லைகளை நீக்கும். மேலும் எதிரிகள் உருவாகாமலும் தடுக்கும். துஷ்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து காக்கப்படுகிறார்கள்.


திடீர் ஆபத்துக்கள் ஏற்படாமல் காக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். சொந்த வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்.


கணவன் மனைவி கருத்து வேறுபாடு உண்டாகும். குடும்ப பிரச்சனைகள் விரைவில் தீரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிட்டும்.


நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும்.


வேலை தேடி அலைபவர்களுக்கு தங்களுக்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்கும்.


தொழில், வியாபாரங்கள் சிறக்கும். லாபங்கள் பெருகும்.


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.


ஓம் சரவணபவ


ஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்


திருச்சிற்றம்பலம்.


பக்தியுடன் மோகனா  செல்வராஜ்