8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

 தமிழகத்தின் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களுக்களூக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.


மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனோடு மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுவதாக மையம் தெரிவித்துள்ளது.


இதனால் சேலம்,தர்மபுரி,கிருஷ்ணகிரி,கள்ளக்குறிச்சி ,திருவண்ணமாலை ,காஞ்சிபுரம்,வேலூர், ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது