சின்ன வெங்காயம் பற்றி தெரிஞ்சிக்கலாம் வாங்க.

‘சைஸ் தான் சிறுசு; பலன்கள் பெருசு’... சின்ன வெங்காயம் பற்றி தெரிஞ்சிக்கலாம் வாங்க.சின்ன வெங்காயத்தை பற்றி பலருக்கும் தெரியாத நல்ல விஷயங்களை தற்போது காணலாம்


தினமும் ஒரு சின்ன வெங்காயத்தை பச்சையாக உண்ணும் போது கிடைக்கக்கூடிய நன்மைகளை பற்றி தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.


சின்ன வெங்காயத்தில் கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம், புரதம், இரும்புச்சத்து, மினரல்கள், வைட்டமின் மற்றும் பொட்டாசியம் என்று ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன. பெரிய வெங்காயத்தை காட்டிலும் சிறிய வெங்காயத்தில் தான் சத்துக்கள் அதிகம். 


அதே போல சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும் போது தான் அதன் முழு மருத்துவ பயன்கள் நமக்கு கிடைக்கும். அதனால் முடிந்த அளவு சின்ன வெங்காயத்தை பச்சையாக எடுத்து கொள்வது மிகவும் நல்லது. தினமும் ஒரு சின்ன வெங்காயம் எடுத்து கொள்ளும் போது இரத்த நாளங்களில் இருக்கும் அடைப்பை ஏற்படுத்தக் கூடிய கொழுப்பை கரைத்து இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. 


அதிகமான அளவு யூரிக் அமிலம் சேருவதன் காரணமாக தான் நமக்கு சிறுநீரக கற்கள் உண்டாகிறது. இதற்கு சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வரும்போது யூரிக் அமிலத்தால் ஏற்படும் கற்கள் கரைந்து விடும்.


முதுமையில் ஏற்படும் மூட்டு வலி, முதுகு வலி மற்றும் இடுப்பு வலிக்கு சின்ன வெங்காயத்தை தொடர்ச்சியாக எடுத்து வரும்போது இது போன்ற பிரச்சனைகள் வராது.


வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.


தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.


தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.


தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.


தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.


தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்.


காலநிலை மாற்றத்தால் ஒரு சிலருக்கு இருமல், நெஞ்சு சளி, நுரையீரலில் அலர்ஜி, மூக்கடைப்பு போன்ற தொல்லைகள் வரும்.


அதற்கு இரவு தூங்கும் முன்பு தினமும் ஒரு சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு விட்டு படுக்கும் போது இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். பல் வலி மற்றும் ஈறு வலி உண்டாகும் போது ஒரு சின்ன வெங்காயத்தை வெறும் வாயில் போட்டு மென்றாலே வலி குறைந்து விடும். அது மட்டுமல்ல வாய்துர்நாற்றம் வராமலும் இது தடுக்கும்.


ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.


வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.


நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.


பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் உடல் நலம் பயணம் தொடரும்.


வணக்கம் அன்புடன்  மோகனா செல்வராஜ்