உழவர் சந்தைகளில் வெங்காயம் விற்பனை


 


ஹைதராபாத் உழவர் சந்தைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35க்கு விற்பனை செய்யப்படுகிறது.


மழை மற்றும் வரத்து குறைவு காரணமாகவும், இந்தியாவில் அதிக அளவில் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.


இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளிலும் 1 கிலோ வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை செய்ய  வேளாண் துறை அமைச்சர் நிரஞ்சன் ரெட்டி உத்தரவிட்டார்.


மேலும், ஒரு நபருக்கு இரண்டு கிலோ வெங்காயம் விற்கப்படும்  என்றும் வெங்காயம் வாங்கும் மக்கள் எந்த அடையாள அட்டையையும் கொண்டு வர வேண்டாம் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், அதில் காய்கறி விற்பனை எந்தவொரு இலாப நோக்கமும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று வேளாண் அமைச்சர் எஸ்.நிரஞ்சன் ரெட்டி கூறினார்.