இன்றைய ராசி பலன்கள் (31/10/2020)


மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுங்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள்.நிதானத்தோடு செயல்படும் நாள்.ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.வரவு திருப்தி தரும்.

ரிஷபம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். தாயாருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும்.அனுசரித்து காரியத்தை சாதப்பீர்கள்.கணவன்-மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வேலை பளு அதிகரிக்கும்.


மிதுனம்: சொன்ன சொல்லைகாப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.  திட்டமிட்ட காரித்தில் வெற்றி கிடைக்கும்.தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.குடும்பத்தில் அனுசரித்து செல்லவது நலம்.


கடகம்: உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் முக்கிய விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். முயற்சிக்கு பலன் கிடைக்கும்.ஊக்கத்தோடு செயல்படுவீர்கள். மற்றவர்களின் அன்பை சம்பாதிப்பீர்கள்


சிம்மம்:  குடும்பத்தில் அமைதி நிலவும். அரைகுறையாக நின்றவேலைகள் முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். ஆதரவு கரங்கள் அரவணைக்கும்.மன குழப்பம் அகலும்.கோபத்தை குறைப்பது நல்லது.பொறுமையை கடைபிடியுங்கள்


கன்னி: சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துபோகும். குடும்பத்தில் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டிவரும்.  திட்டமிட்ட காரியம் வெற்றி கிடைக்க வாய்ப்பு.பாக்கிகள் வசூலாகும்.அன்பு கொண்டவர்களிடம் மனவிட்டு  பேசுவீர்கள்


துலாம்:  உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் தேவையான உதவிகளும் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். இன்று எடுக்கும் முடிவுகளில் கவனம் தேவை.மனம் தளரலாம் முயற்சியை மேற்கொள்வீர்கள்.


விருச்சகம்: தேவைக்கு ஏற்ப பண வரவு உண்டு. பேச்சை குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். பழைய உறவினர் நண்பர்கள் தேடிவருவார்கள் உற்சாகமாக செயல்படுவீர்கள்.ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.தொழிலில் லாபம் கிடைக்கும்


தனுசு: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சி மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். பிரார்த்தனையை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.மனசோர்வு அதிகரிக்கும்.உத்யோகத்தில் இருப்பவர்கள் பணியில் சிறப்பாக செயல்படுவீர்கள்

 

மகரம்:  எதிர்பார்ப்புகள் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒருவேலை முடியும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். சாதகமான நாள்.எடுத்து வைக்கும் அடியெல்லாம் வெற்றி.பணியில் கவனக்குறைவு.கணவன்/மனைவி விட்டுக்கொடுத்து செல்வது நல்லது

கும்பம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும்.  அறிமுகமில்லாதவர்களின் அறிமுகம் கிடைக்கும்.தெளிவு பிறக்கும். மந்தநிலை மறையும்.உத்வேகம் வெளிப்படும்.ஆரோக்கியத்தில் அக்கறை தேவை


மீனம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். தோற்றப் பொலிவு கூடும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.பம்பரம் போல சுழன்று கொண்டே பணிகளை முடித்து பாராட்டு பெறுவீர்.எதிர்பார்த்த நற்செய்தி வந்து சேரும்.