உலக அயோடின் தினம் 21.10.2020

 உலக அயோடின் தினம்



உலகில் அயோடின் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதை தவிர்க்கும் முறைகள் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே ஆண்டு தோறும் அக்டோபர் 21 ம் தேதி உலக அயோடின் குறைபாடு தினம் (Global Iodine Deficiency Day, October 21) அனுசரிக்கப்படுகிறது.


மனித உடலுக்கு மிகவும் அவசியமானது, கால்சியம், இரும்பு, அயோடின், தாமிரம், பாஸ்பரம், மாங்கனீசம், துத்தநாகம் போன்ற சத்துகள்.


இவற்றை சேர்க்க தவறினால் கோளாறுகளும் அது தொடர்ந்து நோய் பாதிப்பும் ஏற்படுகிறது. உடலிலுள்ள செல்கள் வளர்ச்சி அடைய இந்த சத்துக்கள் மிக அவசியம்.


இவற்றுள் அயோடின் மிக முக்கியமானது. அயோடின் கலந்த உப்பை போதுமான அளவில் தினசரி பயன்படுத்துவது ஓர் ஆரோக்கியமான பழக்கம்.


அயோடின் சத்து என்பது வைட்டமின்கள், இரும்புச்சத்து போன்று உடலுக்கு சிறிய அளவில் தேவைப்படும் ஊட்டச்சத்து ஆகும்.


உடலில் பல நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது கழுத்துப் பகுதியில் உள்ள தைராய்டு. இதிலிருந்து தைராக்ஸின் சுரக்கிறது. அயோடின் சத்து குறைபாடு ஏற்பட்டால் தைராக்ஸின் குறைந்த அளவிலேயே சுரக்கும்.


மனித உடலுக்கு தினசரி மிகக் குறைவான அளவே 150 மைக்ரோ கிராம் அயோடின் தேவைப்படுகிறது. குறைவாகத்தானே தேவைப்படுகிறது. இது இல்லாவிட்டால் என்ன? மற்றச் சத்துகள்தான் நிறையவே இருக்கிறது என்று அலட்சியமாக இருந்தால் அவதிப்படப் போவது நீங்கள் தான்.


முதலில் அயோடின் என்றால் என்ன என்று கேட்டால் பலரும் அது ஒரு வகையான உப்புன்னு நெனைக்கின்றாங்க. அது ரொம்ப தப்பு. அயோடின் என்பது ஒருவகையான மினரல் ஆகும். ஆறு, நதி, ஏரி போன்ற நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் இயற்கையாகவே அயோடின் அதிகமாக காணப்படும். குறிப்பாக, நீர்நிலைகளின் மணற்பரப்பிலும் அயோடின் ஏராளமாக இருக்கும். இந்த அயோடின்தான் கடல்நீரிலும் மிகுந்து காணப்படுகிறது. உப்பில் அயோடின் ஒளிந்திருக்கும் ரகசியம் இதுதான். பச்சைத் தாவரங்களிலும் அயோடின் உள்ளது.


இயற்கையான நீர் நிலைகளின் மூலமாக மனிதர்களுக்குக் கிடைக்க வேண்டிய அயோடின் சத்து பல நேரங்களில் கிடைக்காமல் போய்விடுகிறது. இதனால் அயோடின் சத்து குறைபாடு அதிகம் ஏற்படுகிறது.


இதனால் பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. முக்கியமாக தைராக்ஸின் ஹார்மோன் சுரப்பில் பாதிப்பு ஏற்படுவதால் தைராய்டு குறைபாட்டை உருவாக்குவது அயோடின் பற்றாக்குறைதான். கடந்த 2015ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றின்படி 4.7 சதவிகிதம் பேருக்கு உலகளவில் தைராய்டு குறைபாடு உள்ளது.


சுருக்கமா சொல்லணும்னா மனிதர்களின் உடல் உயரம் மற்றும் பருமனை நிர்ணயிப்பது இது தான்! சிலர் உயரமாகவும், சிலர் குள்ளமாகவும், சிலர் பருமனாகவும், வேறு சிலர் ராட்சத தோற்றம் கொண்டவர்களாக இருப்பதற்கு இந்த அயோடினே காரணம்.


மேலும் அயோடின் பற்றாக்குறை குழந்தைகளில் உடல் வளர்ச்சி மற்றும் மூளை செயல்பாட்டை மந்தமாக்குகிறது. 10 முதல் 15 ஐ.கியூ பாயிண்ட்களை இழக்கச் செய்கிறது. இதனால், பள்ளிப் படிப்பில் செயல்திறன் குறைந்து விடுகிறது.


மனித உடல் வளர்ச்சியில் வேறுபாடுகளை உருவாக்குவது, உடலிலுள்ள தைராய்டு சுரப்பிகளின் ( Thyroid Glands) வேலை.


இந்த தைராய்டு சுரப்பிகள் கழுத்தில் முன்பக்கமாக குரல் வளைக்கு கீழ் அமைந்துள்ளன. பக்கத்துக்கு ஒன்றாக இரு சுரப்பிகள் இருக்கின்றன. சுமார் 25 கிராம் எடையுள்ள இவை ஒரு திசு மூலம் ஒன்றோடு ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.


இவைகளிலிருந்து தைராக்ஸின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. உடலிலுள்ள அயோடினில் பெரும்பகுதி தைரோகுளோபின் என்ற பொருளாக இருக்கிறது.


இதனால் இளம் வயதினரின் அறிவுத்திறன் பாதிக்கப்படும். குழந்தைகளும், மாணவர்களும் படிப்பில் கவனம் செலுத்தமுடியாது. பெரியவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி ஏற்படும்.


ஆண்களுடன் ஒப்பீடும் போது பெண்களுக்கு தைராய்ட்டு ஏற்படும் அபாயம் 5 மடங்கு அபாயம்.


இந்தச் சத்துக் குறைவால் இந்தியாவில் காஷ்மீர், உத்தரப் பிரதேசம், நாகலாந்து, அசாம், மணிப்பூர், இமாச்சலப் பிரதேசம், வட கிழக்கு எல்லைப் புற மாகாணம் போன்ற பகுதிகளில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்தியாவில் சுமார் 7.1 கோடி பேர்கள் அயோடின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருகிறார்கள். மேலும் 20 கோடிக்கும் மேலானோர் இந்த பாதிப்பின் ஆபத்தில் இருக்கிறார்கள்.


எனவே தினமும் அயோடின் கலந்த உப்பினை பயன்படுத்தவேண்டும்.
மேலும் கடைகளில் அயோடின் கலந்த உப்பை மட்டுமே விற்பனை செய்யவேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.


அயோடினை நாம் உண்ணும் உணவுப் பொருட்களிலிருந்து பெறுகிறோம். சில சமயங்களில் உணவு பொருட்களில் போதுமான அளவு இருக்காது. அப்போது தனியாகச் சாப்பிட வேண்டும்.


அயோடினை நாம் நேரடியாக சாப்பிட முடியாது என்பதால் அதைத குடிக்கும் நீரிலோ அல்லது உணவுடன் சேர்த்துக் கொள்ளும் உப்பிலோ (சோடியம் அயோனைடு) கலந்துக் கொள்ளலாம். உப்போடு அயோ டினை சேர்ப்பது சுலபமான வழி. இதற்காக அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


தைராய்டு பிரச்னை இருப்பவர்கள் எலக்ட்ரான்சின் மாத்திரைகளை காலையில் வெறும் வயிற்றில் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப முழு அல்லது பாதி மாத்திரையை உட்கொள்ள வேண்டும்.


கர்ப்பிணி பெண்களும் வழக்கம் போல் சாப்பிட்டு வர வேண்டும். அது பிறக்கும் குழந்தைக்கு இந்த பிரச்னை வராமல் தடுக்க உதவும். அதே நேரத்தில் இந்த முடிவை மருத்துவ நிபுணரை கலந்து ஆலோசித்தே எடுக்க வேண்டும்.


இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் அயோடின் கலக்காத உப்பை விற்கத்தடை உள்ளது. இதன் மூலம் பெரும்பாலோருக்கு அயோடின் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்பை தடுத்து வருகிறது


தினந்தோறும் ஒவ்வொரு நபருக்கும் தேவைப்படும் அயோடினின் அளவு அவர்களின் வயதுக்கு ஏற்ப மாறுபடுகிறது.


சிசுகளுக்கு அவை கருவில் வளரும் போதே 5 முதல்10 மாதங்களில் 40 முதல் 50 மைக்ரோ கிராம் அயோடின் தேவைப்படுகிறது. இந்த அளவு குழந்தைகள் வளர வளர வளர்ச்சிக்கு ஏற்ப அதிகரிக்கிறது.


ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் நாள் உலக அயோடின் தினம் கொண்டாடப்படுகிறது. 



இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் உடல் நலம் பயணம் தொடரும்.


வணக்கம் அன்புடன்  மோகனா செல்வராஜ்