+2 அசல் மதிப்பெண் சான்றிதழ்...பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

 பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் அக்.,14ம் தேதி முதல் வழங்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் உஷாராணி வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:


மேல்நிலை முதலாம் ஆண்டு (+1 அரியர்), இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும்  இரண்டாம் ஆண்டு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல் (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உள்ளிடவைகள்) அக்.,14ம் தேதி  வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது


மேலும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்விலோ, இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விலோ அல்லது இரண்டு பொதுத் தேர்வுகளிலுமோ முழுமையாக  தேர்ச்சியடையாத மாணாக்கர்களுக்கு, அவர்கள் இரண்டு தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்களை பதிவு செய்து அச்சிடப்பட்ட ஒரே மதிப்பெண் பட்டியலாக  வழங்கப்படும் என்றும் இம்மாணவர்கள் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி  பெற்ற பின் இரு தேர்வுகளுக்கான தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.


மதிப்பெண் சான்றிதழ்களை, மதிப்பெண் பட்டியல்களைப் பெற்றுக் கொள்ள பள்ளி, தேர்வு மையத்திற்கு வருகை தரும் தேர்வர்கள், பெற்றோர்கள்  கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். பள்ளி, தேர்வு மையத்தில் தேர்வர்கள் பெற்றோர்கள் சமூக இடைவெளியினை கண்டிப்பாக  பின்பற்ற வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது