அக்.1 முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய மாற்றங்கள்


அக்டோபர் முதல் தேதியான இன்று ஓட்டுநர் உரிமம், டெபிட், கிரெடிட் கார்டுகள், சுகாதாரக் காப்பீடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.அது குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.


ஓட்டுநர் உரிமம், ஆர்சி புத்தகம் காகிதங்களாக வைக்கத் தேவையில்லை


அக்டோபர் 1-ம் தேதி முதல் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் ஆர்சி புக், ஓட்டுநர் உரிமம், காப்பீடு போன்றவற்றை காகிதங்களாக (ஹார்ட் காப்பிஸ்) வைத்திருக்கத் தேவையில்லை. அதற்கு மாறாக மத்திய அரசின் டிஜிலாக்கர் அல்லது எம்பரிவாஹன் மூலம் டிஜிட்டல் முறையில் வைத்துக்கொள்ளலாம்.
ஸ்மார்ட்போனில் டிஜிலாக்கரைப் பதிவிறக்கம் செய்து இந்த ஆவணங்களை டிஜிட்டல் முறையில் சேமித்துக் கொள்ள முடியும். போக்குவரத்து போலீஸார் ஆய்வின்போது டிஜிட்டல் ஆவணங்களைக் காண்பித்தாலே போதுமானது.மருத்துவக் காப்பீடு


மருத்துவக் காப்பீடு பெறும்போது சில நோய்கள் பட்டியலில் இருந்து குறைக்கப்பட்டுள்ளன. மேலும், சுகாதாரக் காப்பீடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால், ப்ரீமியம் தொகை 2 முதல் 5 சதவீதம் அதிகரிக்கும்.


கிரெடிட், டெபிட் கார்டுகளி்ல புதிய விதிமுறை


கிரெடிட்டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் இனிமேல் உள்நாட்டில் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.
சில்லறை இனிப்புகளுக்கு தேதி


பேக்கிங் செய்யப்படாத, சில்லறையில் விற்பனை செய்யப்படும் பலகாரம், இனிப்புகள் போன்றவற்றில் எத்தனை நாட்களுக்குள் பயன்படுத்தலாம் என்று தேதி குறிப்பிட வேண்டும்.


அனைத்து ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர்களும் 01.10.2020 முதல் இனிப்புகள் சில்லறை விற்பனையின்போது பயன்படுத்தும் தேதி குறிப்பிடுவது கட்டாயம் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (எப்எஸ்எஸ்ஏஐ) உத்தரவிட்டுள்ளது.


 எல்இடி, எல்சிடி விலை அதிகரிக்கும்


வெளிநாடுகளி்ல் இருந்து இறக்குமதி செய்யப்படும் எல்இடி, எல்சிடி டிவி பேனல்களுக்கு 5 சதவீதம் சுங்க வரியை மத்திய அரசு விதித்துள்ளது. 


5 சதவீதம் வரி


வெளிநாடுகளில் இருந்து ரூ.7 லட்சத்துக்கு மேல் பணப்பரிமாற்றம் செய்தால், 5 சதவீதம் கூடுதல் வரி விதிக்கும் நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.கலப்படம்கூடாது
கடுகு எண்ணெயில் மற்ற எந்த சமையல் எண்ணெய் கலந்து விற்பனை செய்ய அக்டோபர் 1-ம் தேதி முதல் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு தடை விதித்துள்ளது. இந்தத் தடை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.


இலவச எல்பிஜி இணைப்பு இல்லை


பிரதமர் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவசமாக எல்பிஜி இணைப்பு வழங்கும் மத்திய அரசின் சலுகை செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிந்துவிட்டது. இனிமேல் உஜ்வாலா திட்டத்தின் கீழ் எல்பிஜி இணைப்பு இலவசம் இல்லை.