எஸ்பிபி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ

 
எஸ்பிபி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ திறக்கப்படும் என்று ராதாரவி தெரிவித்துள்ளார்.


இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது, பாரத் ரத்னா உள்ளிட்ட உயரிய விருதுகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.


பாடகராக மட்டுமன்றி பல படங்களுக்கு டப்பிங் கலைஞராக எஸ்பிபி பணிபுரிந்துள்ளார்.


தெலுங்கில் டப்பிங் செய்யப்படும் கமல் படங்களுக்கு, டப்பிங் கலைஞராகப் பணிபுரிந்தவர் எஸ்பிபிதான். மேலும், டப்பிங் யூனியனில் வாழ்நாள் உறுப்பினராகவும் எஸ்பிபி  இருந்தார்.


மறைந்த எஸ்பிபியைக் கவுரவிக்கும் விதமாக டப்பிங் யூனியனின் செயற்குழு செப்டம்பர் 30 கூடியது. அப்போது எஸ்பிபியின் உருவப் படத்தை தலைவர் ராதாரவி   திறந்துவைத்து அஞ்சலி செலுத்தினார்.
அப்போது, டப்பிங் யூனியனுக்கு தனியே டப்பிஸ் ஸ்டுடியோ ஒன்றைக் கட்ட முடிவு செய்துள்ளதாகவும், அதனை இசைத்துறைச் சாதனையாளர் மற்றும் டப்பிங் கலைஞரான எஸ்பிபி பெயரில் விரைவில் திறக்கப்படும் என்றும் ராதாரவி  தெரிவித்தார்.