குறுஞ் செய்திகள்


நாசா விஞ்ஞானிகள் தெரிவிப்பு:


விண்ணில் இருந்து மணிக்கு 24 ஆயிரம் மைல் வேகத்தில் வந்து கொண்டிருக்கும் ராட்சத விண்கல் பூமியை இன்று கடந்து செல்ல இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


அமெரிக்காவின் மீது சீனா குற்றச்சாட்டு:


ராணுவ பலத்தை காட்டி உலக நாடுகளை அச்சுறுத்துவது நாங்கள் அல்ல. நீங்கள்தான் என்று அமெரிக்காவின் மீது சீனா குற்றம் சாட்டியுள்ளது.


__________________________

மாநில அரசுகள் அறிவிப்பு:


ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடு செய்ய ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்கி கொள்ளலாம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்த கருத்தை 13 மாநில அரசுகள் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளன.


_______________________


நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர்:


நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் 45 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


__________________________


வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு:


தமிழகத்தில் வரும் 21ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ள நிலையில், வகுப்பறைகளில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளன.


_________________________


சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு:


மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், ஒரு சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


__________________________


தமிழக சுகாதாரத்துறை தெரிவிப்பு:


மனநல மருத்துவம் தொடர்பான பணிகளில் ஈடுபடுபவர்கள் மாநில மனநல ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.


__________________________


வருகின்ற 17ஆம் தேதி:


கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பா.ஜ.க தலைவர்களுடன் ஆலோசிக்க முதல்-மந்திரி எடியூரப்பா வருகின்ற 17ஆம் தேதி டெல்லி செல்ல உள்ளார்.


_______________________


 


இங்கிலாந்து அணி வெற்றி:


ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.