வெந்நீரில் உப்பு கலந்து பயன்படுத்துவதால் வரும் நன்மைகள்

 வெந்நீரில் உப்பு கலந்து  பயன்படுத்துவதால் வரும் நன்மைகள் பல உள்ளன. 


இந்த மழைக்காலம் வந்துவிட்டாலே போதும் சலதோஷமும் நம்மளை எப்பொழுதும் தொற்றிக் கொள்ளும். அதிலும் தொண்டை புண் ஏற்பட்டால் கழுத்து கன்னம் எல்லாம் வலிக்க தொடங்கி விடும். எச்சிலை கூட முழங்க முடியாமல் அவதிப்படுவோம்

 


வெறும் உப்பு மற்றும் நீர் உங்கள் கையில் இருந்தால் போதும். தொண்டை புண் பிரச்சினையிலிருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரை தொடர்ந்து ஒரு வாரம் குடித்து வந்தால் செரிமான கோளாறுகள் நீங்கி செரிமான மண்டலம் சிறப்பாக செயல்படும். அடிக்கடி ஏற்படக்கூடிய செரிமான கோளாறுகள் மலச்சிக்கல் ஆகியவற்றை சரி செய்யும்.

 


தொண்டை புண் பிரச்சினையை போக்க இது ஒரு இயற்கையான முறையாகும். வறட்டு இருமல், நெஞ்சில் சளி கட்டுதல், தொண்டை புண், வலி, அழற்சி ஆகியவற்றுக்கு மிகச சிறந்த உடனடி நிவாரணமாக இந்த உப்பு கலந்த நீர் இருக்கிறது.


உணவு உண்ணும் போது உடலுக்குத் தேவையான ஆற்றலை வளர்சிதைமாற்ற முறையில் நீர் கலந்த உப்பு பருகுவதால் கிடைக்கும்.

 


இது ஒரு எளிய வேதி வினை மாதிரி செயல்படுகிறது. இது ஆஸ்மாஸிஸ் (சவ்வூடு பரவல்) முறைப்படி வேலை செய்கிறது. சூடான நீருடன் உப்பு கலந்து கொப்பளிக்கும் போது இது சளியை நெகிழச் செய்து தொண்டை புண்ணிலிருந்து உடனடி நிவாரணத்தை அளிக்கிறது.

அதிக உழைப்பிற்குப் பிறகு இரவில் உப்பு நீரை குடிக்கும் பொழுது மனதை அமைதி அடையச் செய்வதோடு நரம்பு மண்டலங்களையும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கிறது.
இரவு நேரங்களில் குடிக்கக்கூடிய உப்பு தண்ணீர் மனதில் உள்ள அழுத்தத்தைக் குறைத்து ஆழ்ந்த தூக்கத்தை உருவாக்குகிறது.


உடல் வலி மற்றும் அழற்சி சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளையும் நீக்குகிறது. மூட்டு வலியிலிருந்து நிவாரணம் அளித்து நோய் உள்ளவர்களை குணப்படுத்துகிறது.


தொடர்ச்சியாக இந்த உப்பு நீரை குடித்து வரும்போது ஆரோக்கியத்தை பராமரிக்கவும் சர்மத்தை பிரகாசமாகவும் இளமையாகவும் வைக்க உதவுகிறது.


மேலும் இதில் உள்ள அதிகப்படியான கனிமச்சத்துக்கள் எலும்புகளை வலுவாக்கி மேம்படுத்த உதவுவதோடு எலும்புகளை அடர்த்தியாக்கி முதுமை காலத்தில் தேவையான சத்துக்களை வழங்குகிறது. உடல் வறட்சி அடையாமல் இருக்க உதவி செய்கிறது


உப்பு கலந்த நீர் அதிக அடர்த்தி கொண்டது. பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் உங்கள் தொண்டையில் தங்கி வலியை ஏற்படுத்தும். உப்பு நீரில் உள்ள சோடியம் அதிக அடர்த்தியில் இருப்பதால் அடர்த்தி குறைந்த திசு சவ்வுகளின் வழியாக ஊடுருவி அங்கு தங்கியுள்ள பாக்டீரியா மற்றும் வைரல்களை அழிக்கிறது.

 


டான்சில் என்பது நமது நாக்கில் உள்ள அடிநாச்சதை ஆகும். இது தொண்டையின் பின்பகுதியில் உள்ள இரண்டு திசுக்களின் தொகுப்பு . இந்த தசை பாக்டீரியா மற்றும் வைரல் தொற்றால் பாதிக்கப்படும். இந்த அழற்சியால் தசைகள் வீங்கி, மஞ்சள் மற்றும் வெள்ளை நிற சுவர் அதன் மேல் இருக்கும். இந்த பிரச்சினைக்கு நீங்கள் உப்பு கலந்த நீரைக் கொண்டு கொப்பளித்தாலே போதும்.

பாக்டீரியா மற்றும் வைரல்களின் இருப்பிடத்தையே காலி செய்து விடுகிறது. இதனால் மேலும் சளி உருவாகாமல் தொண்டை புண் குணமாகிவிடும்.இதன் ஆன்டி பாக்டீரியல் குணம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் நோய் தாக்கத்தை தடுக்கிறது. pH அளவை பராமரித்தல் உப்பு நீர் தொண்டையில் பாக்டீரியாவால் ஏற்பட்ட அமிலத் தன்மையை போக்கி pH அளவை சமநிலையாக்குகிறது. எனவே இந்த pH ன் சரியான அளவு பாக்டீரியா பெருக்கத்தை தடுத்து தொண்டை புண் குணமாகிறது.

 


இந்த நீர் வாயின் pH அளவை சமநிலைபடுத்தி கெட்ட துர்நாற்றத்திற்கு காரணமான பாக்டீரியாவை அழிக்கிறது.

 


தொண்டை கட்டு ஏற்படவும் பாக்டீரியா மற்றும் வைரல் தொற்றே காரணம். எனவே உப்பு கலந்த நீரை கொப்பளிக்கும் போது அதற்கு காரணமான பாக்டீரியாவை அழித்து நிவாரணம் அளிக்கிறது.

ஜப்பானில் தற்போது நடத்திய ஆராய்ச்சி கருத்து என்னவென்றால் நாம் ஒரு நாளைக்கு மூன்று தடவை உப்பு கலந்த நீரை கொப்பளித்து வந்தால் மேல் சுவாச மண்டலத்தில் ஏற்படும் நோய் தொற்றை 40% வரை தடுக்க முடியும் என்று கூறுகின்றனர்.

இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் சமையல்  பயணம் தொடரும்.வணக்கம் அன்புடன் கார்த்திகா