காங்கிரஸ் எம்பி செல்லகுமாருக்கு கொரோனா தொற்று

 கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்.பி.செல்லகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட செல்லகுமார் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சென்னையில் இன்று ஒரே நாளில் 978 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் இதுவரை 1,47,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


1,33,987 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 10,645 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


சென்னையில் இன்று 17 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மொத்த உயிரிழப்பு 2,959 ஆக உள்ளது.