கருப்பு பேண்ட் அணிந்து விளையாடும் சென்னை, டெல்லி அணி வீரர்கள்


பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். பாடகர் எஸ்.பி.பி மறைவிற்கு பல அரசியல் தலைவர்கள் , சினிமா மற்றும் விளையாடு பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


இன்று ஐபிஎல் தொடரில் 7 -வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும்  துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்நிலையில்,  பாடகர் எஸ்.பி.பி-க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய ஐபிஎல் போட்டியில் கருப்பு பேண்ட் அணிந்து சென்னை, டெல்லி அணி வீரர்கள் விளையாடி வருகிறார்கள்.