ஆன்லைன் வகுப்பு - தற்கொலை


சென்னை சோழவரம் அருகே அருமந்தை கிராமத்தில் ஆன்லைன் வகுப்பு புரியாததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துக் கொண்டார்.


20.09.2020 நேற்று வீட்டில் தூக்கிட்டுக் கொண்ட மாணவி தர்ஷினி ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாணவி தர்ஷினி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


 ஈரோடு மாவட்டம் கோபி அருகே புளியம்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி வேலுச்சாமி. இவரது மகள் ஹேமமாலினி (13). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.


மாணவியின் வீட்டில் கல்வி தொலைக்காட்சி சரிவர கிடைக்காத நிலையில் கல்வி கற்க செல்போன் கேட்டுள்ளார். உறவினர்கள் பழைய மொபைல் வாங்கி தந்துள்ளனர்.


அது பழுதுபட்டதால் மாணவியால் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. தன்னால் படிக்க முடியவில்லை என மனமுடைந்து நேற்று காலை பெற்றோர் வேலைக்கு சென்ற பிறகு மாணவி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.


இது குறித்து பங்களாபுதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.