புழல் மத்திய சிறையில் டாக்டரை தாக்கிய கைதி


சென்னை புழல் மத்திய சிறையில் நேற்று மாலை விசாரணை பிரிவு 5வது பிளாக்கில் உள்ள கைதிகளை சிறை டாக்டர் நவீன்குமார் பரிசோதித்து சிகிச்சை அளித்து கொண்டிருந்தார்.


அப்போது கொலை வழக்கில் கைதான காரைக்கால் முல்லை நகரை சேர்ந்த வினோத் (எ) இயேசுராஜா (30) சக கைதிகளிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டார்.

இதை தடுக்க முயன்ற 2 காவலர்களின் கன்னத்தில் சரமாரியாக அறைந்துள்ளார்.


அப்போது அவரை டாக்டர் நவீன்குமார் சிகிச்சைக்கு அழைத்திருக்கிறார். அவரிடமும் கைதி வினோத் வாய்த்தகராறில் ஈடுபட்டு டாக்டரையும் சரமாரியாக தாக்கியுள்ளார். 


இதுகுறித்து புழல் போலீசில் நேற்றிரவு ஜெயிலர் சீனிவாசலு புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைதி வினோத்திடம் தீவிரமாக விசாரிக்கின்றனர்