மதுரையில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் 165 நாட்களுக்கு பிறகு இன்று முதல் திறக்கப்பட்டது.
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அம்மன் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
முககவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிப்பட்டனர்.
மேலும், பக்தர்கள் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணிக்கு முதல் 8 மணி வரையிலும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.