சுஷாந்த் சிங் மரண வழக்கில் நடிகை ரியா கைது

 
நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கில் நடிகை ரியா கைது செய்யப்பட்டுள்ளார்.


கடந்த ஜூன் மாதம் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டதையடுத்து அவரது மரணம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது, இதனையடுத்து சி.பி.ஐ., அமலாக்கத்துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகியவை இவ் வழக்கை எடுத்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கு தூண்டிய நபராக கருதப்படும் அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி அவரது தம்பி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் மீது போதைப்பொருள் பயன்படுத்தியது, வாங்கியது, விற்றது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.]


நடிகை ரியாவுக்கும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதன் தொடர்பாக நடிகை ரியாவிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து 3 நாட்களாக விசாரணை நடத்தினர்.


இதனையடுத்து நேற்று மும்பையில் போதை பொருள் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளால் நடிகை ரியா சக்ரபோர்த்தி கைது செய்யப்பட்டார். நீதிமன்ற விசாரணையில் நடிகை ரியாவை 14 நாட்கள் சிறையில் வைக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.  இதனால் அவர் மும்பை பைகுல்லா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.