. விழுப்புரத்திற்கு நா.புகழேந்தி நியமனம்.கடந்த செப்டம்பர் 9ம் தேதி திமுகவின் பொதுக்குழுகூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடந்தது. இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளா் பதவிக்கு துரைமுருகன், பொருளாளா் பதவிக்கு டி.ஆா்.பாலு ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.


இதேபோல் இதில், திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக, க.பொன்முடி, ஆ.ராசா ஆகிய இருவரும் நியமனம் செய்யப்பட்டார்கள்.


இதையடுத்து பொன்முடி துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதால் அவர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விலகினார். இதனால் விழுப்புரம் திமுக மத்திய மாவட்டச்செயலாளராக நா.புகழேந்தியை நியமித்து, பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் துரைமுருகன் போட்ட முதல் உத்தரவு இது என்பது குறிப்பிடத்தக்கது.