நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று


சினிமா உலகை சேர்ந்த பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் ராமராஜன் இன்று கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார்.


நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் அடுத்தடுத்து அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக என்று பல கட்சியை சேர்ந்த தலைவர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.


லேசான அறிகுறியுடன் இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் ராமராஜன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .


மருத்துவர்கள் அவரின் உடல்நிலையை பரிசோதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.