ஆராய்ச்சியில் உள்ள கொரோனா தடுப்பூசி- உத்தரவாதம் இல்லை


உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் பல நாடுகளில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில், இந்த கொரோனா தடுப்பூசி விரைவில் வெளியிடப்படும் என பல நாடுகளில் அறிவிக்கப்பட்டு கொண்டிருப்பதால் மக்கள் விரைவில் நாம் கொரோனாவிலிருந்து குணம் அடைந்து விடலாம் என ஒரு நம்பிக்கையுடன் உள்ளனர்.


இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர்  டெட்ரோஸ் அவர்கள் இது குறித்து கூறுகையில், தற்போது ஆராய்ச்சியில் உள்ள எந்த ஒரு கொரோனா தடுப்பூசியும் செயல்படும் என்பதற்கான முழு உத்தரவாதமும் எங்களிடம் இல்லை என கூறியுள்ளார்.


கிட்டத்தட்ட 200 நாடுகளில் தடுப்பூசிகள் தற்போது உருவாக்கப்பட்டு கொண்டு இருப்பதாகவும், இதில் உயர் தரமான மற்றும் குணமாக்கக் கூடிய திறமை அதிகமுள்ள மருந்துகளை தான் கண்டறிகிறோமே தவிர இந்த மருந்தினால் முழுவதுமாக குணமடைய முடியும் என்பது குறித்து நாங்கள் இன்னும் எந்த தடுப்பூசியையும் நம்ப முடியவில்லை.


பல நாடுகளில் தடுப்பூசி கண்டறியப்பட்டு கொண்டிருப்பதால் இது ஒரு போட்டியாக எடுத்துக் கொள்ளக்கூடாது, கொரோனாவை ஒழிப்பதற்கான ஒரு முயற்சியாகத்தான் கருதவேண்டும்.


தற்போது அழிந்து வரக்கூடிய மனித உயிர்களை மீட்கவும் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியைத் மீட்டெடுக்கவும் இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆராய்ச்சி உதவும் என நம்புகிறோம் என டெட்ரோஸ் கூறியுள்ளார்.