பஞ்சபூதத் தலங்கள் - ஆகாயத்தலம் நிறைவு பகுதி

பஞ்சபூதத் தலங்கள் -    ஆகாயத்தலம்


சிதம்பரம் நடராசர் கோயில்12 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிதம்பரம் கோயிலுக்கு இருக்கும் வரலாற்றைவிட இந்த ஊருக்கு மிகப்பெரிய வரலாறு உள்ளது.

 

தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சிதம்பரம் சோழர்காலத்தின் மிகப்பிரபலமான கோயில் நகரம்.

 

நான்கு திசைகளிலுமே நன்கு துல்லியமாக கட்டப்பட்ட அழகியலை விவரிக்க முடியா பேரழகு கொண்ட மிகப்பெரிய கோபுரங்களையும், அதில் அற்புதமான வடிவங்களையும் கொண்ட ஒரு கோயில் இதுவாகும். இந்த கோயிலைச் சுற்றி அமைந்த நகரமே சிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது.

மூவேந்தர்கள் ஆட்சி செய்த ஒவ்வொரு இடத்தையும் தற்போது தமிழகம் சுற்றுலாத் தளமாகக் கொண்டுள்ளது.

 

பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர பேரரசர்கள் என அவரவர் ஆட்சிகாலங்களில் இந்த கோயில் மிக அழகாக கட்டுமானப் புனரமைப்புப் பணிகள் செய்யப்பட்டதுடன், நிறைய நன்கொடையும் அளித்தது குறிப்பிடத்தக்கது.

 

சிதம்பரத்தில் இருக்கும் தில்லை நடராசர் கோயில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்கு மூலவராக அமர்ந்திருப்பது தில்லை நடராசர். இவருக்கு கூத்தன் எனும் பெயரும் உண்டு.

 


உலகில் எத்தனையோ சிவன் கோயில்கள் இருக்கின்றன. எல்லா கோயில்களிலும் சிவலிங்கமே கோயிலின் மூலவராக இருக்கும். சிவ பெருமான் எந்த கோயிலிலுமே மானிட உருவில் இல்லை. ஆனால் இந்த சிதம்பரம் கோயில் மட்டும் விதிவிலக்கு.

 

சிவபெருமான மனித அவதாரத்தில் வீற்றிருக்கும், அதிலும் நடனமாடிய காட்சியிலேயே இருக்கும் உலகின் ஒரே கோயில் இதுமட்டும்தான். அவருக்கு உமையாளாக பார்வதி தேவியும், அவருடன் விநாயகர், முருகர், பெருமாள் ஆகியோரும் இங்கு இருக்கின்றனர்.

ஆழ்வார்கள்


வைணவக் கடவுளான திருமால் இங்கு திருச்சித்திரக்கூடம் என்ற சபையில், நடராசரின் கனகசபைக்கு வெகு அண்மையில் இங்கு பிரதிட்டை செய்யப்பட்டுள்ளார். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் திருச்சித்திரக்கூடம் பற்றி குறிப்பு உள்ளது.


இவ்வாலயத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் எனப்படும் ஆயிரம் தூண்கள் கொண்ட மண்டபம், சிற்பக்கலைக்கும், கட்டடக் கலைக்கும் பெயர் பெற்றது. இதை நிபுணர்கள் கட்டடக்கலையின் அற்புதம் என்று புகழ்கின்றனர்.


சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழா


நடனக்கலைகளின் தந்தையான சிவபெருமானின் நடனமாடும் தோற்றம் நடனராசன் எனப்படுகிறது.இது மருவி நடராசன் எனவும் அழைக்கப்படுகிறது.


பொதுவாகவே பரதநாட்டியம் ஆடுபவர்கள் தில்லை நடராசரை வணங்கியே ஆடுவார்கள். அவரே இந்த கலையின் கடவுளாக போற்றப்படுகிறார்.

 

இவரது நடன அசைவுகளிலிருந்தே பரதநாட்டியம் எனும் கலை பிறந்ததாக நம்பப்படுகிறது. சிதம்பரம் கோயிலுக்கு சென்று பாருங்கள்.

 

இந்த கோயிலின் சிற்பங்கள் அனைத்தும் பரத கலையின் முத்திரைகளை வைத்துள்ளதுபோலிருக்கும்.

சிவபெருமானில் பலவகையான நடனங்களில் இத்தலத்தில் ஆனந்த தாண்டவம் நிகழ்கின்றது. சிதம்பரம் கோவிலில், நாட்டியாஞ்சலி என்ற நாட்டிய விழா ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது.

இங்கு உலகில் பல்வேறு இடங்களில் நாட்டியம் பயிலும் கலைஞர்கள், தங்களுடைய நாட்டியத்தை அர்ப்பணமாக வழங்குகின்றனர். கலைஞர்கள் இங்கு வந்து நாட்டியார்ப்பணம் செய்வதை ஒரு பெருமையாக கருதுகின்றனர்.


தங்கக்கூரை வேயப்பட்ட முதல் கோயில்

தங்கக்கூரை வேயப்பட்ட முதல் கோயில் இந்திய கோயில்களிலேயே தங்கத்தில் கூரை வேயப்பட்ட முதல் கோயில் சிதம்பரம் தில்லை நடராசர் கோயில் என்று நம்பப்படுகிறது.

 

பெரும்பாலும் நிறைய பேருக்கு தெரிந்து பஞ்சாப் பொற்கோயிலிலும், சபரி மலை அய்யப்பன் கோயிலிலும் பொற்கூரை உள்ளது.

 

சோழர் ஆட்சிகாலத்தில் முதலாம் பிராந்தகன் எனும் மன்னர் இந்த அரும்பெரும்காரியத்தைச் செய்து முடித்தார். அவரது முயற்சியினால் தில்லை நடராசர் கோயிலுக்கு தங்க கூரை கிடைத்தது. இதனால் பொன்கூரை வேய்ந்த தேவன் எனும் பெயர் கிடைத்தது.

 

கல்வெட்டுகள்

பக்தி இலக்கியத்திலும், சங்க இலக்கியத்திலும் தில்லை சிவனைப் பற்றி பாடப்பெற்றுள்ளது. சோழ மன்னர்கள் பலர், இந்த ஆலயத்திற்கு பணி புரிந்துள்ளனர்.


இங்குள்ள ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகளிலிருந்தும், பொற்கூரையினாலும் நாம் அறிந்துகொள்ள முடியும்.சோழ மன்னர்கள்,  பாண்டியர்கள் , விஜயநகர பேரரசின் கிருஷ்ண தேவராயரும் மற்றும் நாயக்க மன்னர்களும் கோயிலின் பிரகாரங்கள் சபை மண்டபங்கள் கட்டியதாகவும் பல்வேறு திருப்பணிகள் பலபுரிந்ததாகவும் கல்வெட்டுகளின் மூலம் அறியப்படுகிறது.


கோயில் நிர்வாகம்


தில்லை நடராசர் கோவில் சோழர்களால் நிர்வகிக்கபட்டு வந்தது. பின்னர் விஜயநகர மன்னர்களாலும் நாயக்க மன்னர்களின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வந்த நிலையில் தமிழக அரசு பெரும்பாலான கோவில்களை இந்து அறநிலையத்துறையின்கீழ் கொண்டு வந்துள்ளது.


தற்போது ஆலயத்தை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றாலும், அதற்கு முன்பே எம். ஜி. ராமச்சந்திரன் முதல்வராக இருந்தபோதே சிதம்பரம் கோவிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமிக்க 5–8–1987 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.


தொடர்ந்து பல ஆண்டுகளாக தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருந்துவரும் இந்தக் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகார்களின் பின்னணியில் ,2008 பிப்ரவரியில் சிதம்பரம் நடராசர் கோவிலை தமிழக அரசு கையகப்படுத்தியது.


இதை எதிர்த்து தீட்சிதர்கள் தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றத்தில் தீட்சிதர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், நடராசர் கோவிலை தமிழக அரசு ஏற்றது செல்லாது என்றும், தீட்சிதர்கள் நிர்வாகத்தில்தான் கோயில் இருக்க வேண்டும் என்று கூறினர்.


முறைகேடு குறித்து புகார் வந்தால் அதை சரிசெய்ய கோவில் நிர்வாகத்துக்கு தமிழக அறநிலையத் துறை பரிந்துரைகள் வழங்கலாம் அல்லது புகார்கள் குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுத்து அதை மேற்பார்வையிடலாம் என்று கூறியுள்ளனர்.


மேலும் , சிதம்பரம் நடராசர் கோவிலை பொது தீட்சிதர்கள் தான் கட்டினார்கள்  என்பதற்கான ஆதாரமும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.


கும்பாபிஷேகம்


இக்கோயிலில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு 01.05.2015 வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.


யாக சாலையிலிருந்து கடம் புறப்பட்டு  சிவகாமசுந்தரி சமேத நடராசர் வீற்றுள்ள சித்சபை, ராஜ்ய சபை எனப்படும் ஆயிரங்கால் மண்டபம் மற்றும் நான்கு ராஜகோபுரங்களுக்கு ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 


மகா தீபாராதனை காட்டப்பட்டது. இரவில் தெருவடைச்சான் வீதி உலா சிறப்பாக நடைபெற்றது


தில்லை நடராசர் கோயில் ஆன்மீகத்துக்கு மட்டுமல்ல அறிவியல் பார்வையில் பார்க்கும்போதும் பல கேள்விகளை நமக்கு உதிர்த்திவிட்டு செல்கிறது,. காளகஸ்தி, காஞ்சிபுரம், தில்லை நடராசர் கோயில் ஆகிய மூன்று கோயில்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன.


வடக்கிலிருந்து தெற்கு நோக்கும்போது மிகத் துல்லியமாக இந்த அமைவு உள்ளது. அப்படியானால் அந்த காலத்தில் இதை எப்படி கணித்து கட்டியிருப்பார்கள் என்பது மிகப் பெரிய கேள்வி.


இது இன்றைய அறிவியலுக்கு கொடுக்கப்படும் சவாலாக இருக்கிறது..


பலர் பிக் பாங்க் தியரி உருவாவதற்கு முன்னரே உலகம் எப்படி தோன்றியது என்ற தத்துவத்தை தில்லை நடராசர் கூறியுள்ளதாக நம்புகின்றனர்.

 

அதாவது இந்த உலகம் ஒலியின் மூலம் தொடங்கியது. ஒரு பெரிய வெடிப்புதான் இந்த உலகம் தோன்றியதற்கு காரணம்.

 

அதன்படி, இந்த கோயிலின் மூலவரான ஒரே இடத்தில் நில்லாமல், ஆடிக்கொண்டே இருக்கிறார்.

 

வலது புறத்தில் ஒரு கையில் உடுக்கையும், இடது புறத்தின் ஒரு கையில் தீயையும் வைத்துள்ளார் நடராசர்.

 

ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, அதன்படித்தான் சிவனை அழிக்கவோ ஆக்கவோ முடியாது. சிவன் என்பது வேறு யாரும் இல்லை

 

ஆற்றல்தான் என்பதற்கு சான்றாகத் தான் இந்த கோயில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

 


சென்னையிலிருந்து தொலைவு - வருடத்தின் எல்லா நாட்களிலும் பயணம் செய்யலாம்.

 

எப்படி செல்வது ரயில் மூலமாக விருத்தாச்சலம் ரயில் நிலையம் சிதம்பரத்திலிருந்து 54 கிமீ தூரத்தில் உள்ளது .

 

பேருந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் இங்கு வருகை தரலாம். மேலும் சென்னையிலிருந்து அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 


நாளை   புதிய ஆலயம் 
இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.தென்னாடுடைய சிவனே போற்றி  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றிஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்


அன்பே சிவம் - சிவமே அன்பு


திருச்சிற்றம்பலம்


ஆன்மீக வாழ்வுக்கு புராதன கோவில்கள் பற்றிய தகவல்கள் அவசியம்


நன்றி. 


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்