அதிமுக கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்


அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 


அதிமுக செயற்குழுக்கூட்டம் அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது.இந்த  செயற்குழுவில் 15 தீர்மானங்கள்  நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 


 தீர்மானங்கள் : 



  •  நீட் தேர்வைக் கைவிடவேண்டும்.

  • இரு மொழிக் கொள்கையே அ.தி.மு.க.-வின் மொழிக்கொள்கை. எந்த மொழித் திணிப்பையும் ஏற்கமுடியாது.

  • காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிகளுக்குக் கண்டனம்.

  • கொரோனா நிவாரணத்திற்கும், தடுப்பிற்கும் போதுமான நிதி ஆதாரத்தை தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்க வேண்டும்.

  • இந்தியாவின் பண்பாட்டு மறு ஆய்வுக்குழுவில் தென்மாநிலங்களுக்கு, குறிப்பாக தமிழக அறிஞர்களுக்கும் இடமளிக்க வேண்டும்.

  • ஜி.எஸ்.டி. மற்றும் பல்வேறு திட்டங்களுக்கான மானிய நிலுவைத்தொகையை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.

  • கொரோனா தடுப்பு பணிக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும்.

  • அதிமுகவினர் ஒற்றுமையுடன் செயல்பட்டு மீண்டும் ஆட்சியமைக்க பாடுபட வேண்டும் என்பன உள்ளிட்ட 15  தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.