மாணவி சஷ்மிதா மாநிலத்தில் முதலிடம்


பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும்  கல்லூரிகள், தனியார் சுயநிதிக் கல்லூரிகள் என 523-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன

 

இவர்களுக்கு ஆகஸ்ட் 26ந்தேதி ஆன்லைன் மூலமாக ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்புப் பணியும் நடைபெற்றது. 

 

இதில் 1,12,406 மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் ஆனது  வெளியிடப்பட்டுள்ளது.

 

இதில் சஷ்மிதா என்ற மாணவி 199.67 கட் ஆஃப் மதிப்பெண்களோடு மாநிலத்திலேயே முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

 

அமைச்சர் கேபி அன்பழகன் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்களின் பட்டியலை வாசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் தரவரிசைப்பட்டியலை மாணவர்கள் https://www.tneaonline.org/ என்ற இணையதளம் மூலமாகத் தங்களின் தரவரிசையை அறிந்துகொள்ளலாம்.

 

ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் மாணவர்கள், 044-22351014, 22351015 என்ற உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் சான்றிதழ்களைப் பதிவேற்ற அவகாசம் கோரியதன் காரணமாக  செப்.17, 25, 28 என்று தரவரிசைப்பட்டியலானது வெளியீடு 3 முறை தள்ளி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது