படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த நடிகர்

 நடிகரும், டப்பிங் கலைஞருமாக மலையாள திரையுலகில் இருந்து வந்தவர் பிரபீஷ். கொரோனா ஊரடங்கு தளர்வால் படப்பிடிப்புகள் ஆரம்பமாகி விட்ட நிலையில், கொச்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு படத்தின் படப்பிடிப்பில் பிரபீஷ் கலந்து கொண்டார்.


தன்னுடைய காட்சிகளில் நடித்து முடித்ததும் குழுவில் இருந்த நண்பர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார் பிரபீஷ். அப்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் பதறிப் போன படக்குழுவினர் பிரபீஷை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.


ஆனால் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


மரணமடைந்த பிரபீஷுக்கு 44 வயதாகிறது. மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.