இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது

 நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது. இந்தியாவில் 3,842 மையங்களில் 15 லட்சத்து 97 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் எழுதுகிறார்கள். தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள 238 தேர்வு மையங்களில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 900 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் எழுத இருக்கிறார்கள்.


நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தைரியமாக தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று கல்வியாளர்களும் மன நல நிபுணர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.


தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்து பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன.