துணை பட்ஜெட்டை துணை முதலமைச்சர் தாக்கல் செய்ய உள்ளார்.

 



 


சென்னை கலைவாணர் அரங்கத்தில் வரும் 14ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக தனிமனித இடைவெளியை பின்பற்றி சென்னை கலைவாணர் அரங்கத்தில் கூட்டத் தொடரை நடத்த பொதுப்பணித்துறை ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.


இந்த கூட்டத்திற்கு முன்பாக எம்எல்ஏக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த கூட்டத்தில் துணை பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.


தமிழகத்தில் 5 மாதங்களுக்கு மேலாக தொடரும் ஊரடங்கால் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது. 


இந்த சூழலில் தான் இந்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் துணை பட்ஜெட் வழக்கமானதாக இல்லாமல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.