பொதுப் போக்குவரத்து மீண்டும் துவங்கப்பட்டு உள்ளதால் சென்னை சென்ட்ரல் பேருந்து பணிமனையில் போக்குவரத்துறை அமைச்சர் எம் .ஆர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.
மாவட்ட எல்லையில் உள்ள பேருந்து நிறுத்தம் வரை அரசு பேருந்துகள் இயக்கப்படும், அடுத்த மாவட்டத்திற்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக மாவட்டம் எல்லை வரை பேருந்துகள் இயக்கப்படுகிறது. இரவு 9 மணி வரை மட்டுமே அரசு பேருந்துகள் இயங்கும் என அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம் எடுக்கப்பட்ட ஆயிரம் ரூபாய்க்கான எனவும் மாதாந்திர பேருந்து பயணச்சீட்டு புதிதாக கொடுக்க தொடங்கி விட்டோம் என தெரிவித்தார்.
பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு பேருந்துகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அறிகுறிகள் இருந்தால் மட்டுமே ஓட்டுனர், நடத்துனர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசுப் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படாது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.