அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக் கூடாது


அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக் கூடாது என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.


பெயர் மாற்றம் செய்தால் அண்ணா பல்கலைக்கழகத்தின் தரம் பறிபோய்விடும் என்றும் முன்னணி நிறுவனங்களுடன் செய்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் கேள்வி குறியாகும் என்றும் எனவே பெயரை மாற்றக் கூடாது என்றும் அரசுக்கு உத்தரவிடக் கோரி கடிதத்தில் வலியுறுத்தி உள்ளனர்.