ஸ்வப்னா சுரேஷ் மருத்துவமனையில் அனுமதி


ஐக்கிய அரசு அமீரகத்தில் இருந்து கேரளாவின் மணப்பாடில் உள்ள அந்நாட்டு தூதரக முகவரிக்கு வந்த பெட்டியில் 30 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்கள்.


கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஸ்வப்னா சுரேஷ் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.


இந்த வழக்கில் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஸ்வப்னா சுரேஷ், திரிச்சூர் மாவட்டத்தின் விய்யூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளார். சிறையில் இருந்த ஸ்வப்னா சுரேஷுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் திரிச்சூரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.