கரோனா வைரஸ் தொற்று


ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு  வெளியிட்டுள்ளது.


இந்தியாவில்கரோனா  வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் 17.09.2020  புதிதாக 5,560 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 420 ஆக அதிகரித்துள்ளது.


சென்னையில் 992 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 52 ஆயிரத்து 567 ஆக உயர்ந்துள்ளது.


17.09.2020 தனியார் மருத்துவமனைகளில் 23 பேர் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 36 பேர் என, மொத்தம் 59 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.


இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,618 ஆக உயர்ந்துள்ளது.